14.ஜனவரி. 2026 மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு கண்ணமங்கலம் சாலையில் சுத்தமான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்

சென்னையில் பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.
அடையாறு பகுதியில் விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.

செங்கல்பட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிகளவு கூட்டம் காணப்பட்டது.

கன்னியாகுமரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு என உயர்வு.
மல்லிப்பூ கிலோ ரூ. 6,500-க்கும், பிச்சிப்பூ ரூ.2,500-க்கும் விற்பனை

சென்னை காசிமேட்டில் நண்பர்களுடன் கடலில் குளித்த வியாசர்பாடியைச் சேர்ந்த வினோத் (15) என்ற சிறுவன் அலையில் சிக்கி மாயம்.
சிறுவனை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்பிடி துறைமுக போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி தண்ணீர் வரத்து சீரானதால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம்.
இன்று வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு குளித்து மகிழ்ந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்
நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார். சோளிங்கரில் நடுரோட்டில் கார் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. உயிர் சேதம் இல்லை

திருச்சி துறையூரில் மது போதையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்ற பெண் காவலரை கடித்த இளைஞர்கள்.
பெண் காவலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அஜித்(30), ஜெகதீஷன்(18) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரம் தோறும் புதன்கிழமையில் ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம்.
இன்று ஒரு ஆட்டின் விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையில் விற்பனை நடைபெற்றது. அதிகாலை முதலே பரபரப்பாக ஆடு சந்தை நடைபெற்று விற்பனையில் ரூ.2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

செங்கல்பட்டு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் புகை மூட்டம்.
பாலங்கள், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மற்றும் புகைப்படலம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.


⭐⭐⭐⭐⭐⭐⭐
      
⭐⭐⭐⭐⭐⭐⭐


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *