கனிமொழி கருணாநிதி தேர்தல் வியூகம்

திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொண்டு வருகிறது : கனிமொழி கருணாநிதி எம்.பி

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ், சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய குழு பயணம் செய்து பொதுமக்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை அளிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், இன்று (19/01/2026) சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸில் தொடங்கியது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கருத்து கேட்பு கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கனிமொழி கருணாநிதி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ், சுரேஷ் குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த தேர்தல் அறிக்கை குழு மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங்களை பணித்துள்ளார். அந்த பணியை ஏற்று, இன்று குழுவின் முதல் சந்திப்பு ஓசூரில் தொடங்கியுள்ளோம்.

“மக்களைத் தேடிச் செல்லுங்கள், மக்களிடம் செல்லுங்கள்” என்று பேரறிஞர் அண்ணா கூறினார். அந்த வழியில், திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு முறையும் மக்களிடமிருந்து கருத்துகளை கேட்டறிந்து, மக்களுடைய தேர்தல் அறிக்கையாகவே எழுதப்படுகிறது.

“சொல்வதை செய்வோம், செய்வதை சொல்லுவோம்” என்று கலைஞர் கூறுவார். கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. அவற்றில் 404 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், பலர் எத்தனை தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், அதற்கான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

ஒன்றிய அரசு ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு அரசுக்கு இடைஞ்சல் செய்து வருகிறார்கள். அதற்கு இடையிலும் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.

ஒன்றிய அரசு, ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என தெரிவித்து வருகிறது. ஆனால், முடியாததையும் முடித்துக் காட்டும் திமுக அரசு, ஓசூரில் விமான நிலையம் அமையும் என நமது தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இங்கு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு நிதி வழங்காவிட்டாலும், எவ்வளவு தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், மீதமுள்ள 101 வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றும்.

நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற நம்பிக்கையில் உங்களைச் சந்திக்க நாங்கள் வந்துள்ளோம். உங்களுடைய கருத்துகளை கேட்டு, எதெல்லாம் சாத்தியமோ அவை அனைத்தையும் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்ற உறுதியை நான் வழங்குகிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள தனியாக ஒரு ஆன்லைன் போர்டல் (செயலியை) ஏற்படுத்தி உள்ளார். அதில் மக்கள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொண்டு வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்பே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தார்.

அந்த வழியில், ஆன்லைன் போர்டல் மூலம் உலகத்தின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், தங்களுடைய கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மூலமாகவும் இந்த தேர்தல் அறிக்கையை உருவாக்க உள்ளோம். மேலும், மக்களிடமே நேரடியாக வரக்கூடிய ஒரே இயக்கம் திமுக என்று பேசினார்.

*திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொண்டு வருகிறது : கனிமொழி கருணாநிதி எம்.பி*

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *