விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை :AD. 8925130576

விழுப்புரம் மாவட்ட காவல்துறை.விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு.புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 300 மது பாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது.கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி அருகில் நேற்று இரவு காவல் ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள்வாகன சோதனை மேற்கொண்ட போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த TN05AC8508 என்ற பதிவெண் கொண்ட டாட்டா இண்டிகோ கார் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.எனவே எதிரிகள் 1.கார்த்திகேயன் (28) த/பெ வெள்ளையன்2.செல்வராஜ் (37) த/பெ வெள்ளையன் ,இருவரும் நாமக்கல் மாவட்டம் ஆகியோர் கைது செய்யப்பட்டு 750 ml அளவு கொண்ட 300 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *